ஒரே எண்ணம், ஓர் ஆயிரம் பார்வை


வாழ்க்கை மெதுவாக நகர கண்டேன்.காட்சிகள் இம்முறை புதிதல்ல. அதே சாலை, அதே முகங்கள், அதே பேருந்து. இம்முறை புதிதாக எதுவும் தேவைப்படவில்லை. மனமோ மெதுவாக பழக கண்டேன். பழகுதலில் வரும் மிதமான போதை, இசையோடு கூடுதல். சுவையுட்ட, வெண்ணிலா போன்று என்னுள்ளே தொலைந்து மறுபடியும் கிடைத்தேன்.

பேருந்து பயணங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை சில நேரங்களில் அப்படியே எங்கேயாவது தொலைந்து போய்விடலாம் என்று தோனும், நானோ வேறு நாட்டில் எதோ ஊரில் இருக்கிறேன், பின்பு ஏன் இந்த சிந்தனை எனக்கு அடிக்கடி என்று நானே பல முறை என்னிடம்  கேட்டிருக்கிறேன்.

பதில் கிடைத்ததே இல்லை.

வாழ்கையில் பிடிப்பு இல்லையா என்று கேட்டால், அப்படி ஒன்றும் இல்லை. நல்ல வாழ்க்கை, இந்த வாழ்க்கை கிடைக்க கைகூப்பி அழுத நாட்கள் பல உண்டு ஆனாலும் ஏன் இப்படி?

வெறுமையா? இல்லையே! எனக்கு எழுத பிடிக்கும். அதுவே சுவசம் போன்று எனக்கு. வாழ்க்கை என் வார்த்தைகள் மூலம் அழகாவதை எப்பவுமே கண்டிருக்கிறேன்.

எதோ ஒன்று கிடைக்காதா மாதிரியே எண்ணம், எப்பவும், ஏன் என்று அறிய முடியவில்லை.

எதையோ தேடும் என் எண்ணம், சற்றும் நின்றதே இல்லை. மனமது நின்று ரசித்த தருணங்கள் மிக சிறிது.

எனக்கு நான் யோசிப்பதை யேசித்து பார்பதற்கே வேடிக்கையாக உள்ளது!

Comments

  1. So Ture... Even I have the same feeling sometime, Engayachu tholangi poidalamnu, then I realize Already apdi than eruken nu hahaha love this

    ReplyDelete
    Replies
    1. Ellarum kittathata orae maadhiri dhane appo!? Hahaha

      Delete
  2. Amidst darkness grasp, light finds its glow. In tears of sadness, happiness will grow.
    Through life's detours, the right path is found,
    Lost, but not hopeless, a new course unbound.

    ReplyDelete
  3. உள் இலக்கை அடைவது ஒரு மகிழ்ச்சி. எவரும் எங்கோ தொலைந்து போக நினைக்க மாட்டார்கள் மாறாக அவர்கள் தங்கள் இலக்குகளை அடையும் போது அவர்கள் அப்படி உணர்கிறார்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கைக்கான காரணம் அவர்களுக்குத் தெரியாது. ஏனென்றால் அவர்கள் தங்கள் இலக்கை அடைவதே வாழ்க்கை என்று நினைக்கிறார்கள், அவர்களின் கவனம் அனைத்தும் அவர்களின் இலக்கை நோக்கி செலுத்தப்படும். இறுதியாக அவர்கள் தங்கள் இலக்கை அடைவதற்கான பயணத்தில் பெற்ற அனுபவத்திலிருந்து தங்களை உணர்ந்து கொள்கிறார்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts