புதிர்

 புரியா பொருள் தேடி…!

கண்ணைக்கட்டிவிட்டு வரும் காட்சியெல்லாம் நீயா, நீலமா?

மதிக்கு வண்ணம் பூசி காற்றோடு பறக்கவிட்டு நானும் பறக்கவா?

நீருக்குள் குதித்தபின் வரும் நிசப்தம், பாடலா? நீர்த்திரையா?

கையிக்குள் காற்றையடைத்துகாட்டியது, குமிழியா? அல்லது எல்லாம் என் கற்பனையா?

காலம் கண்டெடுத்த வானம், என் கனவா? நிஜமா?

பாதைமாறி தொலைந்தபின் என் நிழழோடு கைகோர்த்து நானும் நடக்கவா?

என்னோடு என்றென்றும் வரும் என் கதைகள், என் நண்பனா, சுமையா?

வாழ்க்கையின் வலி மாறாத, காயமா? நுண் கலையா? , கானலா?

சிந்தையில் எழுந்தது சிந்தனைகள் மீண்டும் வெளிச்சம் காட்டுமா?

நின்ற இடத்திலேயே நின்று ரசித்தது நட்சத்திரங்களயா, மின்மினியா?

திங்கள் போன்று ஒவ்வொரு முறையும் புதிதாக அறிமுகமாகவா??

Comments

  1. கண்ணைக்கட்டிவிட்டு வரும் காட்சியெல்லாம் நீயா, நீலமா?

    நீங்கள் தேர்ந்தெடுத்த நபரைப் பொறுத்தது.

    மதிக்கு வண்ணம் பூசி காற்றோடு பறக்கவிட்டு நானும் பறக்கவா?

    உண்மையற்ற உலகத்திற்காக உங்கள் எண்ணங்களை தியாகம் செய்வதற்கு பதிலாக உங்கள் இதயம் சொல்வதை தொடருங்கள்.

    நீருக்குள் குதித்தபின் வரும் நிசப்தம், பாடலா? நீர்த்திரையா?

    எண்ணம் போலத்தான் வாழ்க்கை.

    கையிக்குள் காற்றையடைத்துகாட்டியது, குமிழியா? அல்லது எல்லாம் என் கற்பனையா?

    உங்கள் நம்பிக்கைக்கு எதிராக யதார்த்தத்தைப் பொறுத்தது

    காலம் கண்டெடுத்த வானம், என் கனவா? நிஜமா?

    மின்னுவது எல்லாம் தங்கம் அல்ல.

    பாதைமாறி தொலைந்தபின் என் நிழழோடு கைகோர்த்து நானும் நடக்கவா?

    பாதை எங்கோ பயணம் அங்கே.

    என்னோடு என்றென்றும் வரும் என் கதைகள், என் நண்பனா, சுமையா?

    நடப்பவை கதையாக மாறலாம் ஆனால் வாழ்க்கையில் கதைகள் நிஜமாகாது.

    வாழ்க்கையின் வலி மாறாத, காயமா? நுண் கலையா? , கானலா?

    மூன்றும் அல்ல அனுபவம்.

    சிந்தையில் எழுந்தது சிந்தனைகள் மீண்டும் வெளிச்சம் காட்டுமா?

    வாழ்க்கையில் இருள் சூளாது நம் எண்ணத்தில் தான் இருள் சூழும். இருள் சூழும் போதுதான் வெளிச்சத்தின் அருமை உணரப்படுகிறது.

    நின்ற இடத்திலேயே நின்று ரசித்தது நட்சத்திரங்களயா, மின்மினியா?

    மனம் நினைக்கும் கற்பனை எண்ணத்தை.

    திங்கள் போன்று ஒவ்வொரு முறையும் புதிதாக அறிமுகமாகவா??

    பிடித்த பொருளை பார்க்கும் போதெல்லாம் மேலு புதிதாய் தெரியும், பிடிக்கும் என்ற ஒன்றை மறந்து விட்டு பார்த்தால் சாதாரணமாக தெரியும். பார்பவை கண்களை மட்டும் பொறுத்தது அல்ல உள்ளத்தின் என்னத்த பொறுத்தது.

    ReplyDelete

Post a Comment

Popular Posts